திருவண்ணாமாலை மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களுக்காக சமைக்கப்பட்டிருந்த சத்துணவை சாப்பிட்டு பார்த்து ஆய்வு மேற்கொண்டார்.
இதனை கண்ட திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் காரிலிருந்து இறங்கி கீழே விழுந்த அந்த வாலிபரை தனது காரிலேயே அழைத்து சென்று சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்ததார்.
நேற்று மதிய உணவு வேளையின் போது, பூங்கா பகுதி ஒன்றின் புல் தரையின் மீது சக ஊழியர்களுடன் அமர்ந்து சகஜமாக ஆட்சியர் பிரசாந்த் மதிய உணவு சாப்பிட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்தது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் அரடாப்பட்டு கிராமத்திலுள்ள அரசு பள்ளியில் சத்துணவு தரமாக சமைத்து கொடுப்பது இல்லை என புகார் எழுந்தது.
இதையடுத்து அந்த பள்ளியில் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, மாணவர்களுக்ககாக சமைக்கப்பட்டிருந்த சத்துணவை சாப்பிட்டு பார்த்து உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். இதனை பள்ளி மாணவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
பிரசாந்த் தான் ஆட்சியர் என பெரிதாக நினைக்காமால் நாளுக்கு நாள் அவர் மிக எளிமையாக நடந்து கொள்ளும் இது போன்ற விஷயங்கள் அனைவரின் மனதையும் கவர்ந்துள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை