Ad Code

Responsive Advertisement

கல்வி கொள்கை கூட்டத்தில் தமிழகம் பங்கேற்க முடிவு

புதிய கல்விக் கொள்கை மற்றும், 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பாக, டில்லியில் நடக்கும் கூட்டத்தில், தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் பங்கேற்கிறார்.ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் கமிட்டி அறிக்கையின் படி, மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி உள்ளது. அதன் முக்கிய அம்சங்களை, மூன்று மாதங்களுக்கு முன், மத்திய அரசு வெளியிட்டது;

அதற்கு, எதிர்ப்பு எழுந்தது.இந்நிலையில், கல்விக் கொள்கை குறித்த முதல் ஆலோசனை கூட்டம், டில்லியில், வரும், 25ல் நடக்கிறது. இதில், அனைத்து மாநில பள்ளிக்கல்வி, உயர்கல்வி அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் இருந்து, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபிதா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

இதுகுறித்து, அனைத்து ஆசிரியர் முன்னேற்ற பேரவை தலைவர் ஆரோக்கியதாஸ் கூறுகையில், ''ஆல் பாஸ் திட்டத்தை நிறுத்தினால், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மாணவர்கள், எட்டாம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாமல் இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே, ஆல் பாஸ் திட்டத்தை ரத்து செய்ய, தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்,'' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement