Ad Code

Responsive Advertisement

பிஎஸ்சி (அக்ரி) படிப்பு - அட்மிஷனுக்கு கால அவகாசம் நீட்டிப்பு!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் வேளாண்துறை கல்லூரிகளின் மாணவர்கள் சேர்க்கைக்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 3௦-ஆம் தேதியோடு நிறைவடைந்து விட்டது. இந்நிலையில் நிரப்பப்பட்ட இடங்களை தவிர மீதமுள்ள இடங்களையும் நிரப்புவதற்கு வேளாண்மை கல்லூரிகள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதில் கூறியதாவது: 

2௦16ஆம் ஆண்டுக்கான வேளாண்துறை படிப்புக்குக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு கடைசி தேதி ஆகஸ்ட் 3௦ஆம் தேதியோடு முடிந்தது. இந்நிலையில் நிரப்பட்ட இடங்களை தவிர விவசாயப் படிப்புக்குக் காலியாக உள்ள இடங்களின் சேர்க்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மாணவர்கள் சேர்க்கைக்கு கடைசி தேதி முடிவடைந்த நிலையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு வரும் அக்டோபர் 21ஆம் தேதி வரை கூடுதல் கால அவகாசம் வழங்க உத்தரவிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement