Ad Code

Responsive Advertisement

வினா வங்கி எப்போது? : மாணவர்கள் எதிர்பார்ப்பு

பள்ளிக்கல்வித் துறையின் புதுப்பிக்கப்பட்ட வினா வங்கி, எப்போது கிடைக்கும் என, பிளஸ் 2 மாணவர்கள் எதிர்பார்த்து உள்ளனர். தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 10 ஆண்டுகளாக, ஒரே பாடத்திட்டம் அமலில் உள்ளது. 

பொதுத்தேர்வுக்காக, பள்ளிக்கல்வித் துறை, இந்த பாடத்திட்ட வினாத்தாள்களை தொகுத்து, பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம், வினா வங்கியாக வெளியிடும். இதை படித்தால், அதிகபட்சம், 50 சதவீதம் வரை மதிப்பெண் பெற முடியும் என, மாணவர்கள் நம்புகின்றனர். ஆனால், நான்கு ஆண்டுகளாக, வினா வங்கியில் புதிய வினாக்கள் இடம் பெறவில்லை.

2012க்கு பின் நடந்த, பொது மற்றும் துணைத்தேர்வு வினாக்கள், வினா வங்கியில் இல்லை. எனவே, வினா வங்கியை நம்பிக்கையுடன் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டாவது, வினா வங்கி புதுப்பிக்கப்படுமா என, மாணவர்களும், ஆசிரியர்களும் எதிர்பார்த்து உள்ளனர். ஆனால், 'வினா வங்கியை அச்சடிக்கும் பணியே, இன்னும் துவங்கவில்லை' என, கல்வித் துறை அதிகாரிகள் கூறுகின்றனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement