Ad Code

Responsive Advertisement

உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகுமா?

தமிழகத்தில், வட கிழக்கு பருவமழை துவங்கவுள்ளது. இதனால்,உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிப்போகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை, 17, 19ம் தேதிகளில் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் முடிவு செய்தது; போட்டியிட, 4.97 லட்சம் பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஆனால், உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு,சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்தது. 

புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, டிச., 31க்குள் தேர்தல் நடத்திமுடிக்கவும் உத்தரவிட்டுள்ளது.சிரமம்இந்நிலையில், வட கிழக்கு பருவமழை வரும், 20ல் துவங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பருவமழை டிசம்பர் மாதம் வரை நீடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், பருவமழை காலத்தில், தேர்தல்நடத்த வாய்ப்பில்லை என, கூறப்படுகிறது.

மாநில தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை, பருவமழைக்கு முன் நடத்திமுடிக்க, தேர்தல் கமிஷன் ஏற்பாடு செய்தது; அதற்கு, தடை விதிக்கப்பட்டு விட்டது. இப்போது, பருவமழை காலத்தில், தேர்தல் நடத்த வேண்டியுள்ளது; அது, சிரமம். எனவே, தேர்தலைதள்ளிப் போடுவது சம்பந்தமாக, தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement