தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பொம்மலாட்டம் மூலம் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறை வருகிற (நவம்பர்) 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
தமிழ்நாட்டில் மத்திய-மாநில அரசுகள் இணைந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில்
(1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை) படிக்கும் மாணவ-மாணவிகள் அனைவருக்கும் பொம்மலாட்டம் மூலம் பாடம் கற்பிக்க முடிவு செய்து உள்ளது.
இதுதொடர்பாக சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அனைவருக்கும் கல்வி திட்டம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு சார்பில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.
இதில் பொம்மலாட்டத்தில் நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் எஸ்.வி.மாணிக்கம், சுகந்தி டெய்சி ராணி உள்பட பலர் பயிற்சி அளித்தனர். பயிற்சியை மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகுழு இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், இணை இயக்குனர் பாலமுருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.
பயிற்சி குறித்து அனைவருக்கும் கல்வி திட்ட சீனியர் ஆலோசகர் ஆர்.மாலதி கூறியதாவது:-
7-ந் தேதி முதல்...
தமிழ் உள்பட அனைத்து பாடங்களையும் பொம்மலாட்டம் மூலமாக நடத்தி காண்பித்து மாணவர்களுக்கு எளிமையான முறையில் ஆசிரியர்கள் கற்பிப்பார்கள். அதற்காக மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன ஆசிரியர்கள், வட்டார வள மைய ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பலருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
இவர்கள் அந்தந்த மாவட்டத்தில் உள்ள நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்களுக்கு கற்பிப்பார்கள். பின்னர் அனைத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி வருகிற (நவம்பர்) 5-ந் தேதி முதல் நடத்தப்படும்.
பயிற்சி பெற்ற அனைத்து ஆசிரியர்களுக்கும் கையேடு வழங்கப்படும். அதனை பயன்படுத்தி தங்கள் வகுப்பில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு பொம்மலாட்டம் மூலம் பாடங்களை கதைகளாக கூறி நடத்துவார்கள். இந்த புதிய கற்பிக்கும் முறை வருகிற 7-ந் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் மாணவர்கள் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ள முடியும்.
இவ்வாறு மாலதி தெரிவித்தார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை