சிறப்பு ஆசிரியர்களுக்கு, உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்குவது குறித்து முடிவு எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு, ஆறு வாரம் கெடு விதிக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளில், கலை, ஓவியம், தையல் உள்ளிட்ட பாடப் பிரிவுகளில், 15 ஆயிரம் பேர் சிறப்பு ஆசிரியர்களாக பணி புரிகின்றனர். இவர்கள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு முடித்தால், பதவி உயர்வு வழங்க வேண்டும். காலியிடங்கள் இல்லாததால், பல ஆயிரம் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
அதேநேரத்தில், ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பின், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்பு படித்திருந்தால், உயர் கல்வி ஊக்க ஊதியம் வழங்க வேண்டும். இதில், இளங்கலை பட்டப்படிப்புக்கு மட்டும், ஒரு ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு உள்ளது;
முதுகலை படிப்புக்கு வழங்கவில்லை. இது தொடர்பாக, சிறப்பு ஆசிரியர்கள் பல மனுக்கள் அனுப்பியும், கல்வித் துறை அதிகாரிகள் பரிசீலிக்கவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க நிர்வாகியும், வேலுார் மாவட்ட, அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியருமான கமலக்கண்ணன், ஊக்க ஊதியம் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆறு வாரங்களுக்குள் முடிவு எடுக்க, பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டு உள்ளது. ஊக்க ஊதியம் அளிக்க முடிவு எடுத்தால், கடந்த கால பாக்கியையும் சேர்த்து வழங்க வேண்டும் என்பதால், கல்வித் துறை அதிகாரிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை