Ad Code

Responsive Advertisement

பிளஸ் 2 மறுமதிப்பீட்டு முறை ரத்து செய்ய சி.பி.எஸ்.இ., திட்டம்

பிளஸ் 2 விடைத்தாள் மறுமதிப்பீட்டு முறையை ரத்து செய்ய, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள, சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். 

சி.பி.எஸ்.இ., நடத்தும் பொதுத் தேர்வில், 2014ல் விடைத்தாள் மறுமதிப்பீடு திட்டம் அமலானது. வழக்கமான மதிப்பீட்டில் பிரச்னை இருப்பதாக தெரிய வந்தால், மறு மதிப்பீட்டுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.கடந்த, இரு கல்வி ஆண்டு களில் மறுமதிப்பீட்டுக்கு, இரண்டு சதவீதத்திற்கும் குறைவானவர்களே விண்ணப்பித்தனர்.

அத்துடன், மறுமதிப்பீட்டில், பலரது மதிப்பெண்கள் மாறவில்லை. சொற்ப அளவிலான மாணவர்களுக்காக, பல ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு, கூடுதல் சம்பளம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே, மூன்று வகை மேற்பார்வையுடன், விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படுவதால், பெரிய அளவில் புகார்கள் எழவில்லை.

எனவே, விடைத்தாள் மறுமதிப்பீட்டை, நடப்பு கல்வி ஆண்டில் ரத்து செய்யவும், தற்போதுள்ள திருத்த முறையை தொடரவும், சி.பி.எஸ்.இ., அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்; இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விரைவில் வெளியிடப்பட உள்ளது. 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement