புதிய கல்விக் கொள்கையை முடிவு செய்வது குறித்து, அக்., 25ல், டில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. மத்திய அரசின் சார்பில், ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில், கமிட்டி அமைத்து, புதிய வரைவு கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது.
இந்த கொள்கைக்கு, ஜூலை முதல் செப்., வரை, நாடு முழுவதும் கருத்துக்கள் பெறப்பட்டன. புதிய கல்விக் கொள்கையை இறுதி செய்வது குறித்து, வரும், 25ல், டில்லியில் மத்திய மனிதவள அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. மாநிலங்களில் இருந்து, அதிகாரி ஒருவரை அனுப்பி வைக்க, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. கட்டாய கல்வி சட்டத்திருத்தம், எட்டாம் வகுப்பு வரையிலான, 'ஆல் பாஸ்' திட்டத்தில் மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த கூட்டத்திற்கு, பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. அதன் ஒருங்கிணைப்பாளர், பிரின்ஸ் கஜேந்திரபாபு, மத்திய அரசுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், 'புதிய கல்விக் கொள்கைக்கு, பல மாநிலங்களும், அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், மத்திய அரசின் வரைவு கல்விக் கொள்கையை, இறுதி செய்யக் கூடாது' என, தெரிவித்து உள்ளார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை