Ad Code

Responsive Advertisement

259 ரூபாய்க்கு 10GB டேட்டா... ஏர்டெல்லின் அதிரடி சலுகை

ஏர்டெல் நிறுவனம் புதிதாக 4ஜி மொபைல் வாங்கும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் 259 ரூபாய்க்கு 10 GB டேட்டா வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னனி தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், 4ஜி மொபைல் வாங்கும் அனைத்து ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் 259 ரூபாய்க்கு 10 GB டேட்டா வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. 

259 ரூபாய் பேக் ரிசார்ஜ் செய்தவுடன் 1GB கிரடிட் ஆகும். மீதமுள்ள 9GB டேட்டாவை ‘மை ஏர்டெல் ஆப்’ மூலமாக டவுன்லோட் செய்து பெற்றுக் கொள்ளலாம். இந்த டேட்டா பேக் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் . மூன்று மாதம் வரை இந்த சலுகை வழங்கப்படும். எனவும் ஏர்டெல் நிறுவன இயக்குனர் அஜய் பூரி தெரிவித்துள்ளார்.

முன்னர் குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்ட இந்த அதிரடி சலுகை தற்போது இந்தியா முழுக்க வழங்கப்பட உள்ளது.

ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக வர்த்தக ரீதியான 4ஜி சேவையை நாடு முழுவதும் உள்ள 296 நகரங்களில் அறிமுகப்படுத்தியது. ஏர்டெல் நிறுவனம் முதற்கட்டமாக இந்தியாவில் கொல்கத்தாவில் இலவசமாக 4ஜி சேவையை வழங்கியது. பின்பு சென்னை உட்பட இந்தியாவின் மேலும் சில முக்கிய நகரங்களில் இலவசமாக 4ஜி சேவையை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement