நாடு முழுவதும் செல்பேசி பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும் செல்பேசி மூலம் அரசிடம் இருந்து பொதுமக்களுக்கு தேவைப்படும் சேவைகளுக்கான விண்ணப்பங்கள் செல்பேசி மூலம் பெறமுடிகிறது. மேலும் பேருந்துச் சீட்டு, தங்குமிட முன்பதிவு, திரையரங்கச் சீட்டு,
கடந்த 2003ஆம் ஆண்டு, 30 ஆண்டுகள் எண் திட்டம் என்ற அடிப்படையில் இப்போதுள்ள செல்பேசி எண்கள் மத்திய தொலைதொடர்புத் துறையால் கொண்டு வரப்பட்டது. ஆனால் செல்பேசியின் வளர்ச்சி, அதிகரித்துவரும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றால் தொலைதொடர்புத் துறை மறுஆய்வு செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் இப்போதுள்ள 10 இலக்க செல்போன் எண்களை மாற்றிவிட்டு, 11 இலக்க செல்போன் எண்களை நடைமுறைக்குக் கொண்டுவர தொலைதொடர்புத் துறை முடிவு செய்துள்ளது.
இதன்படி, இனி ஒவ்வொரு செல்போன் நிறுவனங்களுக்கும் குறிப்பிட்ட வரிசை அடிப்படையில் 11 இலக்க செல்போன் எண்களைத் தர உள்ளன. இந்த 11 இலக்க எண் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு, 10 இலக்க செல்போன் எண்களை 11 இலக்கமாக மாற்ற தொலைதொடர்புத் துறை அனைத்து செல்பேசி நிறுவனங்களுக்கும் ஆலோசனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை