Ad Code

Responsive Advertisement

CPS:புதிய ஓய்வூதிய திட்ட முரண்பாடுகள்: அரசு குழுவிடம் ஆசிரியர்கள் மனு.

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட முரண்பாடுகளை நீக்க வேண்டும்' என, அரசு சிறப்புக் குழுவிடம், ஆசிரியர்கள் முறையிட்டுள்ளனர்.புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, ஆசிரியர் சங்கங்கள், பல போராட்டங்களை நடத்தின. 

இதையடுத்து, புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ஆய்வு செய்ய, தமிழக அரசின் சார்பில், முதல்வரின் தனிப்பிரிவு செயலரும், திட்டக் குழு முன்னாள் தலைவருமான, சாந்தஷீலாநாயர் தலைமையில், நான்கு பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டது.வழங்குவது குறித்துஇந்த குழுவுக்கு, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில், பொதுச் செயலர் பேட்ரிக் ரைமண்ட் மனு அனுப்பியுள்ளார்.

அதன் விபரம் வருமாறு:புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில், பல குறைகள்உள்ளன. மாநில அரசு விரும்பினால் மட்டும், இத்திட்டத்தை அமல்படுத்தலாம் என, ஏற்கனவே மத்திய அரசுதெரிவித்துள்ளது; எனவே, முழுமையாக ரத்து செய்ய வேண்டும்.புதிய திட்டத்தில், ஓய்வூதியம் எவ்வளவு என்பது சரியாககுறிப்பிடப்படவில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பிடிக்கப்பட்ட தொகையை, மத்திய அரசின் ஆணையத்திற்கு, தமிழக அரசு இன்னும் செலுத்தவில்லை. குடும்ப உறுப்பினர்களுக்கு, ஓய்வூதியம் வழங்குவது குறித்து, எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

திட்டத்தில் இல்லை:அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்றாலோ, பணியின்போது மரணம் அடைந்தாலோ, அவர்களுக்கு, மூன்று விதபணிக்கொடைகள் உண்டு; புதிய திட்டத்தில், இந்த அம்சம் இல்லை. பழைய திட்டத்தில் உள்ளது போன்று, அகவிலைப்படி உயரும்போது, ஓய்வூதியமும் உயரும் என்ற பலன், புதிய திட்டத்தில் இல்லை. இப்படி பல முரண்பாடுகள் உள்ளதால், திட்டம் குறித்து, ஆசிரியர்களிடம் கருத்து கேட்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement