பிரபல இணைய தேடுபொறி நிறுவனமான கூகுள் 'அல்லோ என்ற பெயரில் புதிய செய்தி பரிமாற்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு மே மாதம் 'டியூ' எனப்படும் காணொளி அழைப்பு சேவை வசதி செயலி மற்றும்'அல்லோ' எனப்படும் செய்தி பரிமாற்ற செயலி ஆகியவற்றை கொண்டுவர இருப்பதாக அறிவிப்பு செய்தது.
இந்த 'அல்லோ செய்தி பரிமாற்ற செயலியானது உள்ளிணைந்த கூகுள் தேடுபொறி வசதியுடன் வெளிவருகிறது. இதன் காரணமாக ஏதாவது ஒரு விஷயத்தை இணையத்தில் தேடுவதற்காக உரையாடல் செயலியிலிருந்து வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. கூகுள் உதவு ஒருங்கிணைப்பு வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. மேலும் பயனாளர்கள் தங்கள் கூகுள் கணக்கை இத்துடன் இணைத்துக் கொள்ளலாம்.
இத்துடன் இதில் பல்வேறு தரப்பினரும் பயன்படுத்துவதற்கு ஏதுவான'எமோஜிகள் . மற்றும் 'ஸ்டிக்கர்களும்'இடம் பெற்றுள்ளன.ஆனால் வாட்சப்பில் இடம் பெற்றுள்ள கோப்புகள் பரிமாற்றம் மற்றும் குரல்வழி அழைப்பு வசதி போன்ற வசதிகள் தற்போது இந்த செயலியில் இடம் பெறவில்லை. ஆனால் வெகுவிரைவில் குரல்வழி அழைப்பு வசதி 'அல்லோ 'செயலியில் இடம் பெறுமென்று கூகுள் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை