Ad Code

Responsive Advertisement

பாடத்திட்டத்தில் இல்லாத புத்தகங்கள் : சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு எச்சரிக்கை

பாடத் திட்டத்தில் இடம் பெறாத புத்தகங்களை வாங்க, மாணவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது' என, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.


சி.பி.எஸ்.இ., சுற்றறிக்கை: அதிக சுமை கொண்ட புத்தக பையை சுமப்பதால், மாணவர்களுக்கு, உடல்நல பிரச்னைகள் ஏற்படும். கூடுதல் புத்தகங்களை, மாணவர்கள் சுமக்காமல் இருக்க, சரியான திட்டமிடலுடன், பாட அட்டவணை தயாரித்து, அதற்கேற்ப புத்தகங்களை கொண்டு வர,
அறிவுறுத்த வேண்டும். வகுப்புகளுக்கு தேவையில்லாத புத்தகம், நோட்டு மற்றும் விளையாட்டு பொருட்கள் கொண்டு வராமல் பார்த்து கொள்ள வேண்டும். வீட்டுப் பாடங்கள் அதிகம் கொடுத்தால், புத்தக பையின் சுமை ஏறும். தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., புத்தகம் தவிர, கூடுதல் புத்தகங்களை பயன்படுத்தக் கூடாது; மீறும் பள்ளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப் படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement