Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் தினம்: ஆளுநர் வித்யாசாகர் ராவ் வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் வாழ்த்துக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், இந்திய குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த சர்வப் பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம் (செப்.5) ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு என் நல் வாழ்த்துகள்.


இந்தியாவின் கல்வித் தரத்தை உலக அளவுக்கு உயர்த்த வேண்டும் என்பதே ராதாகிருஷ்ணன் கண்ட கனவாகும்.

 நாட்டின் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சமநிலை நிலையுடனும், சகோரத்துத்துவத்துடன் கல்வி கற்பிக்க வேண்டும் என்பதே அவரின் எண்ணமாக இருந்து வந்தது.

  புதிய கற்பிக்கும் முறை மூலம் மாணவர்களுக்குப் பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து, இந்தியாவை உலகளவில் உயர்த்திக் காட்டுபவர்கள் ஆசிரியர்கள்தான்.

 இன்றைய நிலையில் நாம் எந்த இடத்தை அடைந்திருந்தாலும், நம்மை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு நமது நன்றியையும், மரியாதையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement