Ad Code

Responsive Advertisement

ஆசிரியர் கவுன்சிலிங் விதிமுறையில் மாற்றம்

தமிழகத்தில், இன்று துவங்கும் பட்டதாரி ஆசிரியர் பொதுமாறுதல் கவுன்சிலிங்கில் சில மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது. உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இன்று மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கிறது. நாளை, மாவட்டங்களுக்கு இடையே நடக்கிறது. 

இரு கவுன்சிலிங்குகளும் கடந்த ஆண்டு வரை, 'ஆன்லைன்' மூலம் நடத்தப்பட்டன. மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங்கை, 'ஆன்லைனில்' நடத்துவதால், 'சீனியர்' ஆசிரியர்கள் முன்னுரிமை அடிப்படையில் இடங்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. 'ஜூனியர்' ஆசிரியர்களே அதிக பலன் அடைந்தனர். இதற்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து மாவட்டத்திற்குள் இடமாறுதல் கவுன்சிலிங்கை, 'ஆன்லைனில்' இல்லாமலும், மாவட்டங்களுக்கு இடையே, 'ஆன்லைனிலும்' நடத்த பள்ளிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜூ கூறுகையில், “ புதிய நடைமுறையால் சீனியர் ஆசிரியர்கள் இடங்களை தேர்வு செய்வதில் சிக்கல் இருக்காது.

அதேபோல் மாவட்டங்களுக்கு இடையே, 'ஆன்லைனில்' நடத்தும்போது, ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு அலைவது தவிர்க்கப்படும்,” என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement