புது தில்லி: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணி தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று மத்திய பணியாளர், பயிற்சித் துறை அமைச்சகத்துக்கு மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (யுபிஎஸ்சி) பரிந்துரைத்துள்ளது.
முன்னதாக குடிமைப்பணித் தேர்வு முறை குறித்து ஆய்வு செய்ய முன்னாள் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை செயலாளரும், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியுமான பி.எஸ்.பாஸ்வான் தலைமையில் ஒரு குழுவை யுபிஎஸ்சி அமைத்தது. இக்குழு தனது பரிந்துரைகளை கடந்த மாதம் அளித்தது. அதில் குடிமைப்பணித் தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டுமென்று பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், அக்குழுவின் பரிந்துரைகளை இறுதி முடிவுக்காக மத்திய பணியாளர், பயிற்சித் துறை அமைச்சகத்துக்கு யுபிஎஸ்சி அனுப்பிவைத்துள்ளது.
குடிமைப்பணித் தேர்வு எழுதுவதற்கான அதிகபட்ச வயது வரம்பு 32-ஆக உள்ளது. இதனைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை பாஸ்வான் குழு பரிந்துரைத்துள்ளதாகத் தெரிகிறது.
இப்போது, முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என்ற வரிசையில் தேர்வு நடத்தப்பட்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர்பதவிகளுக்கு அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.
21 வயது முதல் 32 வயதுக்குள்பட்டவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், எஸ்.சி., எஸ்.டி., ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் சலுகை அளிக்கப்பட்டு வருகிறது.

0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை