தமிழகத்தில் பேராசிரியர் பணியில் சேர, மாநில அளவிலான, 'செட்' தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். அகில் இந்திய அளவில் நடத்தப்படும், 'நெட்' தேர்வில் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டும் வினாத்தாள் இருக்கும்; அதனால், தமிழில் வினாத்தாள் வழங்கும், செட் தேர்வையே பலரும் எழுதுகின்றனர்.
ஆனால், ஏழு மாதங்களாகியும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால், வேலைவாய்ப்புகள் இருந்தும், அவற்றுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பலர் உள்ளனர். குறிப்பாக, சமீபத்தில், இன்ஜினியரிங் கல்லுாரி பேராசிரியர் பதவிக்கு, 192 இடங்களுக்கு தேர்வு அறிவிப்பு வெளியானது. பள்ளிக்கல்வித் துறையின், ஆசிரியர் பயிற்சி நிறுவன கல்லுாரிகளுக்கு, 272 விரிவுரையாளர்களுக்கு, சமீபத்தில் தேர்வு நடந்தது.
மனோன்மணியம், பாரதியார் பல்கலைகளில், 150 இடங்களை நிரப்ப அறிவிப்புவெளியாகியது. செட் தேர்வு முடிவு வெளியாகாததால், இந்த பணிகளுக்கு, முதுநிலை பட்டதாரிகளால் விண்ணப்பிக்க முடியாமல் போய் விட்டது.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை