Ad Code

Responsive Advertisement

தமிழக உயர்நிலைப் பள்ளிகளில், தொழிற்கல்வி வகுப்புகளை துவக்காததால், மத்திய அரசு நிதி கிடைப்பதில் சிக்கல்.

தமிழக உயர்நிலைப் பள்ளிகளில், தொழிற்கல்வி வகுப்புகளை துவக்காததால், மத்திய அரசு நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின், 'மேக் இன் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, அம்ரூத் சிட்டி' போன்ற திட்டங்களின் கீழ், பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள், தொழிற்பேட்டைகள் உருவாக்கம் போன்ற வளர்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடும் தட்டுப்பாடு :
இதற்கு, இன்ஜி., பட்டதாரிகள், தொழில்நுட்ப வல்லுனர்களுடன் சேர்ந்து, தொழிற்கல்வி பயின்ற பணியாளர்களும் தேவைப்படுகின்றனர் நாட்டில் தற்போது, தொழில் திறன் பெற்றவர்களுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளது. அதனால், இன்ஜி., பட்டதாரிகள், இன்ஜி., பட்டய படிப்பு பெறுவோர் உட்பட, அனைவரும் தொழில் திறனை பெற்றுக் கொள்ள, 'ஸ்கில் இந்தியா' என்ற, திறன் வளர்ப்பு திட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி, மத்திய அரசின் இடைநிலை கல்வித் திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், அரசு உயர்நிலைப்பள்ளி களில், தொழிற்கல்வி வகுப்புகளை துவங்க, மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.உள்கட்டமைப்பு மற்றும் ஆசிரியர்கள் நியமனத்துக்கு நிதி உதவி செய்வதாகவும் மத்திய அரசு அறிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையும் இதை ஏற்று, அதற்கான வரைவை மத்திய அரசுக்கு அளித்துவிட்டது. இருப்பினும், ஒன்பது மற்றும், 10ம் வகுப்புகளில், இன்னும் தொழிற்கல்வி படிப்புகளை துவக்கவில்லை. கடந்த மார்ச்சில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், மத்திய அரசு அதிகாரிகள் இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளனர்.

சிக்கல் : அப்போது, 2016 - 17ல், தொழிற்கல்வி துவங்கி விடுவதாக, தமிழக பள்ளிக்கல்வி அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்படி, இதுவரை அதற்கான பணிகளை துவங்காததால், மத்திய அரசு நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement