Ad Code

Responsive Advertisement

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் லஞ்சமா: புகார் செய்யலாம்...

கல்வி உதவித்தொகை, பள்ளி அங்கீகாரத்திற்கு லஞ்சம் கேட்டால், உடனே புகார் செய்ய வேண்டும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சி.பி.எஸ்.இ., கூறியுள்ளதாவது:சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பள்ளிகளுக்கு, 'ஆன்லைன்' மூலம் மட்டுமே அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இந்த இணைப்பை பெற, இடைத்தரகர்களை அணுக வேண்டாம்.
மாணவர் கல்வி உதவித்தொகை வழங்கவும், அங்கீகாரம் வழங்கவும் யாராவது லஞ்சம் கேட்டால், உடனே புகார் செய்ய வேண்டும். இதுகுறித்த புகார்களை, சி.பி.எஸ்.இ., தலைவருக்கு, chmn-cbse@nic.in என்ற இ - மெயில் முகவரிக்கும், தலைமை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிக்கு, srana.cbse@gmail.com என்ற முகவரிக்கும் அனுப்பலாம். இவ்வாறு வாரியம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement