Ad Code

Responsive Advertisement

பாலியல் தொல்லையில் தப்ப மாணவியருக்கு 'திகாத்' பயிற்சி

பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க, அரசு பள்ளி மாணவியருக்கு, 'திகாத்' என்ற தற்காப்பு கராத்தே பயிற்சி வழங்கப்படுகிறது. அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின், பெண் கல்வி திட்டக்கூறு சார்பில், கரூர்மாவட்டத்தில், 31 பள்ளிகளைச் சேர்ந்த, 1,000 மாணவியருக்கு, தற்காப்பு கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது.இது குறித்து, கராத்தே பயிற்சியாளர் ராமதாஸ் கூறியதாவது: 

பள்ளி மாணவியரில், 10 முதல், 15 வயதுக்கு உட்பட்டோர், பாலியல் தொல்லையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவர்கள், எதிர் தாக்குதல் நடத்த முடியாமல், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.

இதற்கு, ஒரு சில யுக்திகளை கையாண்டாலே, எதிரிகளை எளிதில் வீழ்த்த முடியும். 'திகாத்' என்ற எதிர் தாக்குதல் கராத்தே பயிற்சி மூலம், அந்த யுக்திகளை கற்று கொடுக்கிறோம். ஒருவர் அல்லது இரண்டுக்கு மேற்பட்டோர் வந்தால், எப்படி எதிர் தாக்குதல் நடத்துவது என்ற பயிற்சி அளிக்கப்படும்.எதிரிகளிடம் போராடும் போது, அவர்கள் உடலின் மென்மையான உறுப்புகள் மீது தாக்குதல் நடத்த வேண்டும். அப்போது, எதிரிகள் எளிதில் பயந்து ஓடி விடுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement