Ad Code

Responsive Advertisement

770 அரசு மேல்நிலை பள்ளிகளில் தொடுதிரை கற்றல் வகுப்பறைகள்

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்பிக்கும் வகையில், 'விர்சுவல் கிளாஸ் ரூம்' என்ற தொடுதிரை கற்றல் வகுப்பறை அமைக்க, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில்,
770 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் முதற்கட்டமாக, 8.93 கோடி ரூபாயில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பிஉள்ளது.

அதில், 'தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் கம்ப்யூட்டர், ஹார்டுவேர்ஸ், கேமரா,புரொஜக்டர், ஸ்பீக்கர், மைக் சிஸ்டம் பொருத்தும் பணிகளை அவர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தொடுதிரை வகுப்பறைக்கு என, பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள இணையதள வசதியை அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிற அலுவலக பணிக்கு பயன்படுத்தவோ, மின்னஞ்சல் பார்க்கவோ, பதிவிறக்கம் செய்யவோ கூடாது' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.தேனி முதன்மை கல்வி அலுவலர் வாசு கூறியதாவது: தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி, கெங்குவார்பட்டி, சிலமலை, கொடுவிலார்பட்டி, தெப்பம்பட்டி, லட்சுமிபுரம் உட்பட, 22 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தொடுதிரை கற்றல் வகுப்பறை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான கம்ப்யூட்டர் உள்ளிட்ட தளவாட பொருட்களை பொருத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறோம். ஒவ்வொரு பள்ளிக்கும் மாதம்தோறும் தலா, 1,000 ரூபாய் வீதம் இணையதள பயன்பாட்டிற்கு அரசு நிதி ஒதுக்கியுள்ளது. மாணவர்கள் பாடத்தை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், 'சிடி' மூலம் வகுப்பறையில் பாடம் நடத்த சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அக்டோபர், முதல் வாரத்தில் பணிகள் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement