Ad Code

Responsive Advertisement

5 புதிய தாலுகா: முதல்வர் உத்தரவு

சென்னை: நடப்பாண்டில் புதிதாக, ஐந்து தாலுகாக்களை உருவாக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது குறித்து, அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

நாமக்கல் மாவட்டம், கொமாரப்பாளையம்; சேலம் மாவட்டம், காடையாம்பட்டி; திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார்; திருநெல்வேலி மாவட்டம், மானுார் மற்றும் சேரன்மாதேவி உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களுக்கு, 48 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

கடந்த, ஐந்து ஆண்டுகளில், ஒன்பது புதிய கோட்டங்களும், 65 புதிய தாலுகாக்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நடப்பாண்டு, கடலுார் மாவட்டத்தில், காட்டுமன்னார்கோவில் தாலுகாவை பிரித்து, ஸ்ரீமுஷ்ணம் தாலுகா; அரியலுார் மாவட்டத்தில், உடையார்பாளையம் தாலுகாவை பிரித்து, ஆண்டிமடம் தாலுகா உருவாக்கப்படும். அதேபோல், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள, நீடாமங்கலம் தாலுகாவை பிரித்து, கூத்தாநல்லுார் தாலுகா; துாத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் தாலுகாக்களை சீரமைத்து, கயத்தார் தாலுகா; சிவகங்கை மாவட்டத்தில், திருப்பூர் தாலுகாவை பிரித்து, சிங்கம்புணரி தாலுகா உருவாக்கப்படும் என, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement