Ad Code

Responsive Advertisement

அரசு உதவி பள்ளிகளில் 3,000 உபரி ஆசிரியர்கள்

அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். தமிழகத்தில் உள்ள, 45 ஆயிரம் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், 31 ஆயிரம் பள்ளிகள், அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன; 6,500 பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள்; மற்றவை தனியார் பள்ளிகள்.

இதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும், 11.50 லட்சம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இவர்களுக்கு, 36 ஆயிரம் ஆசிரியர்கள்  உள்ளனர். ஆனால், மத்திய அரசின் சட்டப்படி, 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் வீதம், 33 ஆயிரம் ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருக்க வேண்டும்.

கிட்டத்தட்ட, 3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கூடுதலாக பணியாற்றுகின்றனர். அதிலும், குறிப்பிட்ட சில மாவட்ட பள்ளிகளில் மட்டும், இத்தகையை ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகம். அதேநேரத்தில், பல மாவட்டங்களில் உள்ள, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை உள்ளது.எனவே, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள், இந்த பள்ளிகளை ஆய்வு செய்து, கூடுதல் ஆசிரியர்களை, தேவைப்படும் மாவட்டங்களுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Post a Comment

2 Comments

அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..

நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை

Ad Code

Responsive Advertisement