பள்ளி மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆராய்ச்சி மனப்பான்மையை உண்டாக்கவும் ஆண்டுதோறும் தேசிய அளவில் அறிவியல் திறனறித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், மற்றும் விபா தொண்டு நிறுவனம் இணைந்து நடத்தும் இந்தத் தேர்வுகளில் 6-ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்புவரை படிக்கும் அனைத்து மாணவர்களும் கலந்துகொள்ளலாம். இந்த ஆண்டுக்கான தேர்வுகள் நவம்பர் 13-ல் தொடங்குகிறது.
இத்தேர்வுகளுக்கான தமிழக ஒருங்கிணைப்பாளரும் உடுமலைப் பேட்டை கலிலியோ அறிவியல் கழகத்தின் நிறுவனருமான ஆசிரியர் ஜி.கண்ணபிரான் இதுகுறித்து ‘தி இந்து’விடம் கூறும்போது, “அரசு சார்ந்த பள்ளிகளாக இருந்து குறைந்தபட்சம் அப்பள்ளியின் 50 மாணவர்கள் தேர்வு எழுதினால் அவர்கள் தங்கள் பள்ளியிலேயே எழுதலாம். அவர்களுக்கு தலா 50 ரூபாய் கட்டணம். தனியார் பள்ளி மாணவர்கள் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.  இத்தேர்வில் முதல்கட்டமாக மாநில அளவில் வகுப்புக்கு 20 பேர் வீதம் 120 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு விஞ்ஞானிகள் பங்குபெறும் 2 நாள் அறிவுசார் பயிற்சிப் பட்டறைகள் நடைபெறும்.
இதன் முடிவில் அந்த 120 பேரில் வகுப்புக்கு 3 பேர் வீதம் 18 பேர் மாநில அளவில் தேர்ச்சிபெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள். இவர்களில் ஒவ்வொரு வகுப்புக்கும் முதலாம், இரண்டாம், மூன்றாம் பரிசும் முறையே 5,000, 2,000, 1,000 ரூபாயும் சான்றிதழ்களும் வழங்கப் படும். இந்த 18 மாணவர்களில் வகுப்புக்கு 2 பேர் வீதம், டெல்லியில் 2 நாட்கள் நடைபெறும் தேசிய அளவிலான கருத்தரங்குக்கு அழைக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு வகுப்புக்கும் 3 மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, 2-ம் பரிசாக ரூ.7,000, 3-ம் பரிசாக ரூ.5,000 வழங்கப்படும். இவர்கள் தேசிய அளவிலான கல்விச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படுவதுடன் குடியரசுத் தலைவரால் ‘இமாலயன்’ விருது வழங்கியும் கவுரவிக்கப்படுவார்கள்’’ என்றார். தகவல்களுக்கு www.vvm.org.in என்ற இணையத்தைத் தேடலாம். கூடுதல் விவரங்களுக்கு ஆசிரியர் கண்ணபிரானை 9942467764 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை