Ad Code

Responsive Advertisement

NMMS - தேர்வு ஏன் எதற்கு என்பது குறித்த சின்ன விளக்கம்

பள்ளி மாணவ-மாணவிகளின் படிப்புக்கு உதவும் வகையில் மத்திய-மாநில அரசுகள் பல்வேறு கல்வி உதவித்தொகைகளை வழங்குகின்றன. ஒருபுறம் மாணவர்களின் பொருளாதார, சமூக நிலையைக் கருத்தில் கொண்டும், இன்னொரு புறம் தகுதி அடிப்படையிலும் கல்வி உதவித்தொகை (ஸ்காலர்ஷிப்) வழங்கப்படுகிறது._


*தேசிய திறனாய்வுத் தேர்வு என்பது 10ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்படும் சிறப்புத் தேர்வு. இதில் தேர்ச்சிபெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதந்தோறும் ரூ.500 கல்வி உதவித்தொகை வழங்குகிறது. ஆராய்ச்சிப் படிப்பு (பி.எச்டி.) வரை இந்த உதவித்தொகை கிடைக்கும்.*

_இந்த தேர்வை 10ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்களே எழுத முடியும். 9ஆம் வகுப்பு முழுப் பாடத்திட்டத்திலும், 10ஆம் வகுப்பில் நவம்பர் வரையிலான பாடத்திட்டத்திலும் (சி.பி.எஸ்.இ. தரம்) கேள்விகள் கேட்கப்படும்._

_முதலில் மாநில அளவில் ஒரு தேர்வும், அதில் தேர்ச்சி பெறுவோருக்கு தேசிய அளவில் இறுதித் தேர்வும் நடத்தப்படுறது. தமிழக அரசு நடத்தும் முதல் கட்டத் தேர்வு மூலம் 300 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தேசிய தேர்வில் மெரிட் பட்டியலில் முதல் ஆயிரம் இடங்களுக்குள் வந்துவிட்டால் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதில் தமிழகத்துக்கான ஒதுக்கீடு 40 இடங்கள். குறிப்பிட்ட மாநிலங்களில் தகுதியான மாணவர்கள் கிடைக்காதபட்சத்தில், அதிக மதிப்பெண் பெற்றுள்ள மற்ற மாநில மாணவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்._

_இத்தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட சர்வதேச பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்க எளிதாக இடம் கிடைக்கும் என்பது இந்தத் தேர்வின் சிறப்பு அம்சம்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement