Ad Code

Responsive Advertisement

ஆண்ட்ராய்டு செயலி, யூ டியூப் வகுப்பறைகள்!' -அரசுப் பள்ளிகளின் 'ரூட்டை' மாற்றும் ஆசிரியர்கள்

சிறந்தமுறையில் கல்வி கற்பிக்கும் நூறு ஆசிரியர்களின் வீடியோவை யூ டியூப்பில் வெளியிட்டுள்ளது மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம். ' மனப்பாடக் கல்வியை ஊக்குவிக்காமல், பாடத்தை புதுமையான வழியில் கற்பிக்கும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்துகிறோம்' என்கின்றனர் ஆசிரியர்கள்.



தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் பணியைச் செய்து வருகிறது கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, புதுமையான வகையில் வகுப்பெடுக்கும் 100 ஆசிரியர்களைக் கண்டறிந்தார்கள் கல்வி அதிகாரிகள். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என ஆசிரியர்களை வகைப்படுத்தி, பாடம் எடுக்க வைத்தனர்.


மனப்பாடக் கல்வியாக இல்லாமல், மாணவர்களின் பங்களிப்போடு எடுக்கப்படும் பாடங்கள் அசர வைக்கின்றன. தனியார் பள்ளிகளோடு ஒப்பிட முடியாத அளவுக்குக் கற்பித்தல் திறனில் அசத்துகிறார்கள் அரசுப் பள்ளி ஆசிரியர்கள். ஆசிரியர்கள் நடத்தும் இந்த வகுப்புகளை இணையதளத்தில் பதிவேற்றியதை உற்சாகமாக வரவேற்கிறார்கள் கல்வியாளர்கள்.
.
கல்வியியல் ஆராய்ச்சி நிறுவன அதிகாரி ஒருவரிடம் பேசினோம். " புதுமையான வகுப்பறைகளை உருவாக்குவது குறித்து 10 மாவட்டங்களில் உள்ள 100 ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்தோம். அதன்பிறகு, 22 மாவட்டங்களில் 220 ஆசிரியர்கள் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டார்கள். 

இவர்கள் மூலம், மாநிலத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் நவீன கற்றல் வகுப்பு முறைகளைக் கொண்டு செல்ல இருக்கிறோம். அதேபோல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள் அறிவியல் பாடத்தை புரிந்து கொள்ளும் வகையில் புதிய செயலியை (tnschoolslive) அறிமுகப்படுத்தியிருக்கிறோம். கூகுள் ஆண்ட்ராய்டில் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பாடம் புரியவில்லை என்றால், பாடத்தில் காட்டப்படும் படத்தின் மீது செல்போனை வைத்து ஸ்கேன் செய்தால், முப்பரிமாணத்தில் படத்தை பார்ப்பது மட்டுமல்லாமல், அது தொடர்பான எளிமையான விளக்கத்தையும் கேட்கலாம். பாடத்தை வெகு சுவாரஸ்யமாக கற்றுக் கொள்ளலாம்" என்கிறார். 



https://www.youtube.com/watch?time_continue=42&v=pmucT82V6us
-ஆ.விஜயானந்த்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement