Ad Code

Responsive Advertisement

சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம் மாற்ற மத்திய அரசு திட்டம்

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தை மாற்ற, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கான, கருத்து கேட்பு கூட்டம், டில்லியில் நடக்கவுள்ளது.

உலகில் மாறி வரும் தொழில்நுட்பம், கல்வியின் தேவை, மாணவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப, பாடத்திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டியது அவசியம். இதன்படி, சி.பி.எஸ்.இ., அமைப்பு, தங்கள் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை மாற்றி, தரம் உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கான கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், பெற்றோர்களின் கருத்து கேட்பு உயர்மட்ட ஆலோசனை கூட்டம், டில்லியில் வரும், 23, 24ம் தேதிகளில் நடக்கிறது.

இதில், பாடத்திட்டத்தை தரம் உயர்த்துதல், தேர்வு முறைகளில் மாற்றம் கொண்டு வருதல், மாற்றுத்திறனாளி களுக்கு தேவையான பாடத்திட்டம் ஏற்படுத்துதல் போன்ற, பல அம்சங்கள் விவாதிக்கப்பட உள்ளன.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement