Ad Code

Responsive Advertisement

பி.எஸ்.என்.எல்., 'சண்டே ஜாலி' சலுகை : இணையதள இணைப்புக்கு கிடையாது

பி.எஸ்.என்.எல்., தொலைபேசி (தரைவழி) வாடிக்கையாளர்களுக்கான ஞாயிற்று கிழமைகளில் இலவச அழைப்பு சலுகை, அலைபேசி மற்றும் இணையதள இணைப்புகளுக்கு பொருந்தாது' என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தனியார் நிறுவனங்களின் வருகையால், பி.எஸ்.என்.எல்., தரைவழி இணைப்புகளின் பயன்பாடு குறைந்து விட்டது.தரைவழி இணைப்புகளை அதிகரிக்க செய்யும் நோக்கில், சலுகைகளை பி.எஸ்.என்.எல்., அளித்து வருகிறது. தினமும் இரவு 9:00 முதல் காலை 7:00 மணி வரை, தொலைபேசியில் இருந்து எந்த இணைப்புகளுக்கு பேசினாலும் கட்டணம் இல்லை.


இதே போல ஆக.,15 முதல் புதிய சலுகை அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஞாயிற்று கிழமைகளில் தொலைபேசியில் இருந்து பேசும் அழைப்புகளுக்கு கட்டணம்இல்லை.இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., நிறுவன அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வெளிநாடுகளில் வசிப்போருடன் பேசவும், இணையதள இணைப்புக்கும் இச்சலுகை கிடையாது. மற்ற விடுமுறை தினங்களுக்கும் பொருந்தாது. இத்திட்டத்தால்பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்' என்றார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement