Ad Code

Responsive Advertisement

கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு திட்டம்

டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு நடத்தி தேசிய வேலையுறுதி திட்ட கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களை பணிநிரந்தம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தேசிய வேலையுறுதி திட்டம் துவங்கிய போது, ஊரக வளர்ச்சித்துறையில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 

இதில் தொழில்நுட்ப உதவியாளர்கள் ஒன்றிய மேற்பார்வையாளர்களாக பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் நிரந்தரம் செய்யப்படவில்லை. தற்போது அவர்கள் தொகுப்பூதியமாக மாதம் ரூ.11 ஆயிரம் பெற்று வருகின்றனர்.

மாநில முழுவதும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்கள் உள்ளனர். பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி தொடர்ந்து அவர்கள் போராடி வருகின்றனர்.

மேலும் ஊரக வளர்ச்சித்துறை முழுவதும் கணினிமயமாக்கப்பட்டு உள்ளதால் ஆப்பரேட்டர்களுக்கு பணிப்பளுவும் அதிகரித்துள்ளது. இதையடுத்து அவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு நடத்தி பணிநிரந்தரம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement