Ad Code

Responsive Advertisement

தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

சுதந்திர தினத்தன்று மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்காமல் காலதாமதமாக வந்து தேசியக் கொடி ஏற்றியதாக, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.


திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்துள்ள துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வளர்மதி என்பவர் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். சுதந்திர தினத்தன்று பள்ளிக்கு தாமதமாக வந்த வளர்மதி, மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் தகவல் தெரிக்காமல் தேசியக்கொடியை ஏற்ற முயற்சித்தார். இதையறிந்த ஊர் பொதுமக்கள் தேசியக் கொடியை ஏற்றவிடாமல் அவரைத் தடுத்து நிறுத்தி, இதுகுறித்து கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சந்திரிகாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து, துரிஞ்சிக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு வந்த கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரனிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. அதன்பேரில், தலைமை ஆசிரியை வளர்மதியை பணியிடை நீக்கம் செய்து மாவட்டக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement