தமிழ் பாடத்தை எளிதில் கற்றுக் கொடுக்கும் வகையில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை உள்ள, தமிழ் புத்தக பாடல்களின் வீடியோவை, இணையதளத்தில் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் ஒரு பிரிவாக செயல்படும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி., மாணவர்களுக்கு கற்றல் சார்ந்த தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
செயல்வழி கற்றல், கணினி வழி கற்றல் போன்ற பல திட்டங்களில், மொழியை எளிதாக கற்று கொடுக்கும் திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.
அடுத்த கட்டமாக, தொடக்கக் கல்வியில், தாய்மொழியை எளிதாக படிக்கும் வகையில், ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை, புத்தகத்தில் உள்ள, 40 பாடல்கள், வீடியோவாக மாணவர்களின் நடனத் துடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வீடியோ பதிவுகள், யூ-டியூப்பில், தமிழ்நாடு எஸ்.சி.இ. ஆர்.டி., சேனல் என்ற பிரிவில், 'தாயெனப்படுவது தமிழே' என்ற பெயரில், பதிவு செய்யப்பட்டு உள்ளன.
ஒரு வாரத்தில், அதை, 30 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். மேலும், 35 ஆயிரம் தொடக்க பள்ளி
களுக்கு, இலவசமாக இந்த, 'சிடி' அனுப்பப்பட உள்ளதாக, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை