Ad Code

Responsive Advertisement

இளைய ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம்

இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவலில், பணிமூப்பில் குறைந்த ஆசிரியர்களை மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங், வரும், 13, 14ம் தேதிகளில் நடக்கிறது. 

பணி நிரவலில், குறிப்பிட்ட சில ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிக்கு கட்டாயமாக இடமாற்றம் செய்யப்படுவர். இதுதொடர்பாக, தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.


அதில், 'இடைநிலை ஆசிரியர்களை, ஒன்றியத்துக்குள் பணி நிரவல் செய்யும் போது, பள்ளியளவில் பணிமூப்பில் இளைய ஆசிரியர்களை மாற்றம் செய்ய வேண்டும். ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கும், இளைய ஆசிரியர்களை மாற்றம் செய்ய வேண்டும். பணி நிரவல் செய்ய வேண்டிய ஆசிரியர் பட்டியலை தயார் செய்து, சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு, தகவல் தெரிவிக்க வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement