Ad Code

Responsive Advertisement

சி.ஏ., இடைநிலை தேர்வு 'ரிசல்ட்' வெளியீடு

ஆடிட்டர் பணிக்கான சி.ஏ., இடைநிலை தேர்வு முடிவுகள், நேற்று வெளியிடப்பட்டன. சி.ஏ., படிப்பில், முதல் கட்டமாக சி.பி.டி., எனப்படும், பொது தகுதி தேர்வு எழுத வேண்டும். இதில் தேர்ச்சி பெற்றால், ஐ.பி.சி., என்ற இடைநிலை தேர்வை எழுத வேண் டும். இதையடுத்து, இறுதி கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்ற பின், இரண்டு ஆண்டு கள பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவர்.


ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு நடத்தப்படும் நிலையில், மே மாதம் நடந்த இடைநிலை தேர்வு முடிவுகளை, ஐ.சி.ஏ.ஐ., என்ற இந்திய பட்டய கணக்காளர் அமைப்பின் தலைவர் தேவராஜ ரெட்டி நேற்று வெளியிட்டார். தேர்வு முடிவுகள், ஐ.சி.ஏ.ஐ., இணையதளத்தில் வெளியாகின. மேலும், தேர்வர்களின் இ - மெயில் மற்றும் மொபைல் போன்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இரண்டு பாடங்களுக்கு, 1.20 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.

இதில், 10 ஆயிரம் பேர் ஏதாவது ஒரு பாடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு பாடத்தில் மட்டும், 47 ஆயிரத்து, 979 பேர் பங்கேற்று, 8,325 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டு பாடங்களிலும், 2,295 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி, 4.78 சதவீதம். இந்த தேர்வில், மஹாராஷ்டிர மாநிலம், புனேவை சேர்ந்த, தனிஷ்க் ஸ்ரீகாந்த் காலே என்ற மாணவர், அகில இந்திய அளவில் முதலிடம்; இந்துார் மாணவி சலோனி ஜிண்டால் இரண்டாம் இடம்; பவிஷ்ய அமிசகட்டா, மூன்றாம் இடம் பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement