Ad Code

Responsive Advertisement

ஆசிரியர்களுக்கு இன்று கட்டாய இடமாறுதல்

அரசு பள்ளிகளில், இன்று துவங்கும் பணி நிரவல் கலந்தாய்வில், தமிழ், ஆங்கில ஆசிரியர்கள், கட்டாய இடம் மாற்றப்பட உள்ளனர். தமிழக அரசின் பல பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதாச்சாரத்தை விட, 2,500க்கும் மேலான ஆசிரியர்கள் கூடுதலாக உள்ளனர். 

இவர்களை, பணி நிரவல் என்ற பெயரில், வேறு பள்ளிகளுக்கு கட்டாய இடமாற்றம் செய்யும் கலந்தாய்வு, இன்றும், நாளையும் நடக்கிறது. ஆசிரியர்களின் அதிருப்தியை சமாளிக்க, மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர்.


l பள்ளியில், 9 மற்றும், 10ம் வகுப்புக்கு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியலுக்கு, முறையே தலா, ஒரு ஆசிரியர் என, ஐந்து பேர் இருக்க வேண்டும். வகுப்புகளில், 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால், 35 மாணவர்களுக்கு ஒருவர் என, கூடுதலாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவார்.


l ஆறாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை, வகுப்புக்கு, 35 மாணவர்கள் வீதம், 105 மாணவர்களுக்கு, மூன்று ஆசிரியர்கள் பணியில் இருப்பர். மாணவர்கள் அதிகம் இருந்தால், 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் கூடுதலாக நியமிக்கப்படுவார்.


கூடுதல் ஆசிரியர்களில், ஒரே பாடத்தில் இரு ஆசிரியர்கள் இருந்தால், அவர்களில் கடைசியாக பணியில் சேர்ந்தவர் மாற்றப்படுவார். பின், தமிழ் ஆசிரியர், அடுத்து ஆங்கில ஆசிரியர்களும், அடுத்தடுத்து மாற்றப்பட உள்ளதால், மொழி புலமை பெற்ற ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர். 

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement