Ad Code

Responsive Advertisement

சிறுபான்மையின மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

சிறுபான்மையின மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாகவும், இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித்தொகை

தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 11 மற்றும் 12–ம் வகுப்பு, ஐ.டி.ஐ., பாலிடெக்னிக், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், ஆராய்ச்சி படிப்புகள் படிக்கும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், புத்தமதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சேர்ந்த சிறுபான்மையின மாணவ– மாணவிகளுக்கு பள்ளி மேல்படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 

2016–2017–ம் ஆண்டில் கல்வி உதவித்தொகை பெற www.scholarships.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். 11 மற்றும் 12–ம் வகுப்பு படிப்பவர்கள் ஆகஸ்டு மாதம் 30–ந் தேதிக்குள்ளும், மற்ற படிப்புகளுக்கு அக்டோபர் மாதம் 30–ந் தேதிக்குள்ளும் விண்ணப்பிக்கலாம்.தகுதிகள்

தமிழ்நாட்டிற்கு 18,989 மாணவ– மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்க மத்திய அரசால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.உதவித்தொகை பெறுவதற்கு மாணவ– மாணவிகள் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் குறைந்த பட்சம் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும், பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்கவேண்டும். 


ஆதார் எண் கண்டிப்பாக குறிப்பிடப்பட வேண்டும்.மேற்கண்ட இணையதளம் மூலம் விண்ணப்பித்து, சான்றுகளை பதிவேற்றம் செய்து பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கையொப்பமிட்டு, அத்துடன் மதிப்பெண் சான்று, வருவாய்த்துறையிடம் இருந்து பெறப்பட்ட மதத்திற்கான சான்று மற்றும் வருமான சான்றிதழ் அல்லது சுயசான்று ஆகியவற்றின் நகலுடன், கல்விக்கட்டணம் செலுத்தியதற்கான ரசீது, இருப்பிட முகவரி, வங்கிக்கணக்கு எண் ஆகியவற்றை இணைத்து தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் 31–10–2016–க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.இணையதளம் மூலம்

கல்வி உதவித்தொகை மாணவ– மாணவிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக செலுத்தப்படும். எனவே சரியான வங்கி கணக்கு மற்றும் வங்கி குறியீடு எண் விவரங்களை சரியாக குறிப்பிடவேண்டும். வங்கி விவரங்களை தவறாக அளித்தால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.மாணவ– மாணவிகளால் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்களை கல்வி நிலையங்கள் அவ்வப்போது பரிசீலித்து தகுதிபெற்ற விண்ணப்பங்களை 31–10–2016–க்குள் இணையதளம் மூலம் அனுப்பவேண்டும்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement