Ad Code

Responsive Advertisement

ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று சரித்திரம் படைத்தார் இந்தியாவின் தங்க மகள் சிந்து!

கோடிக்கணக்கான  மக்களின் பிரதிநிதியாக சென்று இந்தியாவுக்காக வெள்ளி வென்று சரித்திரம் படைத்திருக்கிறார் பி.வி.சிந்து. ரியோ ஒலிம்பிக்கில் இன்றைய தினம் இந்தியாவின் பி.வி சிந்துவும், ஸ்பெயினின் கரோலினா மரினும்  ஒற்றையர் பேட்மின்டன் இறுதிப்போட்டியில் நேருக்கு நேர் மோதினர். 

உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினாவை முதல் செட்டில் கடினமாக போராடி வென்றவர், அதற்கடுத்த  செட்களில் மிகக் கடுமையாக போராடி தோற்றார். எனினும் இந்தியாவுக்காக வெள்ளி வென்று வரலாற்று சாதனை புரிந்திருக்கிறார் சிந்து. சிந்துவுக்கு இந்தியா முழுவதும் இருந்து பாராட்டுகள் குவிகின்றன.

சிந்துவின் அளப்பரிய  சாதனைக்கு தலைவணங்கி  நாமும் நம் வாழ்த்துகளை  பகிர்வோம்

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement