நல்லாசிரியர் விருது வழங்குவதில் விதிமீறல் நடந்ததாக தொடரப்பட்ட வழக்கை அடுத்து நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒவ்வொரு ஆண்டும்500 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால் கடந்த ஆண்டு நல்லாசிரியர் விருது வழங்கியதில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் விதியைமீறி கல்வி அலுவலர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளதாக கலை ஆசிரியர் சங்கம் சார்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி முதல்வர் தனிப் பிரிவுக்கு புகார் கொடுத்துள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக அக்டோபர் மாதம் மேற்கண்ட இரண்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், பள்ளிக் கல்வி இயக்குநர், அரசு செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.இதற்கு கல்வித்துறையை சேர்ந்த அதிகாரிகள் உரிய பதில் வழங்காமல் மவுனம் காத்துவருவதால் கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கலை ஆசிரியர் சங்கம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் மீது வீசாரணை நடக்கிறது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் இந்த ஆண்டு 22 ஆசிரியர்கள் மட்டுமே நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்துள்ளனர். நீலகிரிமாவட்டத்தில் 3 பேருக்கு மேல் விண்ணப்பிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் நீலகிரி மாவட்ட ஆசிரியர்களை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே நாளை மறுநாளுக்குள் நல்லாசிரியர் விருதுக்கான பட்டியல்களை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், பள்ளி தவிர வீட்டில் தனி வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள், பள்ளியில் பிற பணியில் வெளியே செல்லும் ஆசிரியர்கள் பெயர்களை பரிந்துரை செய்யக்கூடாது, விதிமுறைகளை மீறும் தேர்வுக்குழு உறுப்பினர் மீது நடவடிக்கை பாயும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு போட்டுள்ளது. இதனால், பல ஆசிரியர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாமா, வேண்டாமா என்று தயக்கம் காட்டி வருகின்றனர்
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை