Ad Code

Responsive Advertisement

தமிழக அரசு நல்லாசிரியர் விருதுக்கு 534 பேர் தேர்வு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 534 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 1960ம் ஆண்டு முதல் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. 

பின்னர், இந்த விருது 1997ம் ஆண்டு முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த விருதுடன் முன்னதாக ரூ.5 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பதக்கம், பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டு 534 பேருக்கு மேற்கண்ட விருது வழங்கப்பட  உள்ளது. இந்த ஆண்டு விருது பெறுவோருக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கத்துக்கு பதிலாக ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இதற்கு ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.

இந்த ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகள் அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான பட்டியலை பள்ளிக் கல்வித்துறை தயாரித்து வருகிறது. 

இன்று அல்லது நாளை இந்த பட்டியல் வெளியாகும் என்று தெரிகிறது. விருதுகள் செப்டம்பர் 5ம் தேதி சென்னை சாந்தோமில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நடக்கும் விழாவில் வழங்கவும் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இந்த விழாவிற்கான அழைப்பிதழில் பள்ளி கல்வி துறை அமை ச்சர் பென்ஜமின்  பெயர் அச்சி டப்பட்டு இருந்தது நேற்று இத்துறை அமைச்சர்   மாற்றப் பட்டதால் தற்போது மாபா. பாண்டியராஜன் வழங்குவார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement