Ad Code

Responsive Advertisement

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவர்கள் NMMS தேர்வில் தமிழகத்திலேயே (82 மாணவர்கள் ) அதிக எண்ணிக்கையில் அபார சாதனை.


திருப்பத்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவர்கள் NMMS தேர்வில் தமிழகத்திலேயே (82 மாணவர்கள் ) அதிக எண்ணிக்கையில் அபார சாதனை.


திருப்பத்தூர் ஒன்றியத்தில் அரசு பள்ளி மாணவர்கள் NMMS தேர்வில் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில், 82 மாணவர்கள் அபார சாதனை. எட்டாம் வகுப்பிற்கு இந்திய அளவில் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இந்த தேர்வில் கலந்து கொண்டனர். இந்த NMMS தேர்வில் தமிழகத்திலேயே நமது திருப்பத்தூர் ஒன்றியத்தில் மட்டும் அரசு பள்ளி மாணவர்கள் 82மாணவர்கள் தேர்ச்சி பெற்று வியத்தகு சாதனை படைத்துள்ளார்கள். இது சாதாரண விசயம் இல்லை. அரசு பள்ளிகள் புரிந்துணர்ந்து படிக்கும் கல்விமுறைக்கு கிடைத்த பெரும் வெற்றி , இம் மாணவர்களின் சாதனையால் தமிழகமே நமது திருப்பத்தூரை திரும்பி பார்க்கவைத்திருக்கிறது.

இத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இனி மாதந்தோறும் கல்வி ஊக்க தொகையாக ரூபாய் 500 கிடைக்கும். இக்கல்வி ஊக்கத்தொகை இம்மாணவர்களுக்கு அவர்கள் 12ம் வகுப்பு வரை கிடைக்கும். இந்த அபார சாதனைக்கு உழைத்திட்ட ஆசிரியர்களின் தியாகத்தை சொல்லி வாழ்த்திட வார்த்தைகள் இல்லை. வாழ்க ஆசிரியர்கள் தொண்டு, தொடரட்டும் தாங்கள் பணி. எடுத்துக்கொண்ட வேலையில் நேரம் காலம் பார்க்காமல் திட்டமிட்டு கடுமையாக உழைத்து தங்களின் திறமைகளை மாணவர்களுக்கு அளித்து, இம்மாபெரும் வெற்றிக்கு பிண்ணனியாக இருந்து மாணவர்களை வெற்றி பாதைக்கு தாங்கி ஏற்றி செல்லும் வெற்றி ரதமாக செயல்பட்ட ஆசிரிய கர்ண மகாராசாக்களை மனதார பாராட்டுகிறோம். அந்த வகையில் இந்த தேர்வு அறிவித்ததிலிருந்து இதை எப்படியெல்லாம் நடத்தலாம் என திட்டமிட்டு இந்த மாபெரும் வெற்றிக்கு உழைத்த எமது ஒன்றிய ஆசிரியர்கள் மற்றும் ஊக்குவித்த நமது உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், மூத்த தலைமை ஆசிரியர்கள் இவர்களின் உழைப்பும், வழிகாட்டுதலுமே இந்த மாபெரும் வெற்றிக்கு காரணமாகும். இது போன்ற கல்வி அதிகாரிகளும் , தியாக உள்ளம் கொண்ட ஆசிரியப் பெருமக்களும் இருக்கும் வரை ஏழை மாணவர்களுக்கு நல்ல கல்வி அறிவு தடையின்றி கிடைத்திடும். எனவே இந்த மாபெரும் வெற்றியை நமது ஒன்றித்திற்கு பெற்றுத்தந்த ஆசிரிய பெருமக்களையும், வெற்றி பெற்ற மாணவர்களையும், ஊக்குவித்த கல்வி அதிகாரிகளையும் பாரட்டவேண்டியது நமது தலையாய கடமையாகும்.

இந்த வெற்றியை நாம் அனைவரும் சேர்ந்து வரும் 03.07.2016 ஞாயிற்றுக்கிழமை திருப்பத்தூர் இராமகிருஷ்ணா பள்ளியில் நடைபெறும் வெற்றி விழா கூட்டத்தில் கலந்து கொண்டு, இவ்வெற்றிக்காக உழைத்திட்ட அனைத்து பெருமக்களையும் மனதார வாழ்த்திடுவோம் வாருங்கள். மகிழ்விப்போம்....... மகிழ்வோம்.


அன்புடன்...

மு.சிவக்குமார்,ப.ஆ

.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement