கூட்டுறவு சங்கங்களில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் அனைத்து தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வழங்கிய இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், கூட்டுறவுத்துறை செயலாளர் இன்று அரசாணையை வெளியிட்டார்.
தமிழக முதல்வராக, மீண்டும் பொறுப்பேற்ற ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், கூட்டுறவு வங்கிகளுக்கு, சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக் கடன் மற்றும் நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான கோப்பிலும் கையெழுத்திட்டார். இதை செயல்படுத்தும் வகையில்தான் இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தள்ளுபடி செய்யப்பட உள்ள மொத்த கடன் மதிப்பு ரூ.5750 கோடி என்று கூறப்படுகிறது. யார் யாரெல்லாம் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்கள் என்ற வழிகாட்டு நெறிமுறையும், அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அதிகபட்சமாக 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ளவர்கள்தான் இந்த அறிவிப்பால் பலனடைவார்கள் என்பதால், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி பாசன விவசாயிகள் சங்கத்தின் தனபால் உள்ளிட்டோர் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளனர்.
மழை பொய்த்துப்போனது உள்ளிட்ட இயற்கை பாதிப்பு எல்லா விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியான இழப்பையே ஏற்படுத்தும். அப்படியிருக்கும்போது, 5 ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு கடனை தள்ளுபடி செய்ய மறுப்பது சரியில்லை என்பது இவர்கள் கருத்து. அதேநேரம், சிறு, குறு விவசாயிகளுக்கு இந்த உத்தரவு நலன் தரும் என்று அவர்கள் வரவேற்றுள்ளனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை