தமிழ் புத்தாண்டை, சித்திரை மாதம் கொண்டாட உத்தரவிட்டதோடு, அரசு விழாவாக நடத்தி விருது வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி இந்த ஆண்டும், சித்திரை தமிழ் புத்தாண்டு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
தமிழுக்கும், தமிழ் இலக்கியத்திற்கும் தொண்டாற்றி வருபவருக்கு, உமறுப்புலவர் விருது; தமிழ் இலக்கியங்களை பிற மொழிகளில் மொழி பெயர்க்கும் மொழி பெயர்ப்பாளருக்கு, ஜி.யு.போப் விருது; இளங்கோவடிகளின் நடையையொட்டி புதிய காப்பியம் படைப்பவருக்கோ, சிலப்பதிகாரம் புகழ் பரப்புபவருக்கோ, இளங்கோவடிகள் விருது; மகளிர் இலக்கியங்களை படைப்பதில், தம்மை முழுமையாக ஈடுபடுத்தி தொண்டாற்றி வரும் பெண் படைப்பாளருக்கு, அம்மா இலக்கிய விருது; சிறந்த தமிழ் அமைப்புகளுக்கு, தமிழ்த்தாய் விருது வழங்கப்படும்.
விருது பெற விரும்புவோர், தமிழ் வளர்ச்சித் துறையின், tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில், விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிப்போர், தன் விவரக் குறிப்புகளுடன், இரண்டு புகைப்படம், எழுதிய நுால்கள் விவரத்துடன், அவற்றின் ஒரு படி வீதம், ஆக., 5ம் தேதிக்குள், சென்னையில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்குனர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு, 044- -2819 0412, 2819 0413 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை