புதுவையில் அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்ய அனைத்து துறைகளிலும் பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
இன்று காலை மின்துறை அலுவலகத்துக்கு காலையில் சென்ற போது 50 சத ஊழியர்கள் வரவில்லை. பின்னர் ஆய்வின்போது 25சதவீத ஊழியர்கள் வந்ததை நேரில் பார்த்தார்.புதுச்சேரி மாநில முதல்வராக நாராயணசாமி பதவியேற்றது முதல் தொடர் ஆய்வில் ஈடுபட்டு வருகிறார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ''புதுச்சேரியில் தேவைக்கு அதிகமாகவே மின்சாரம் கிடைக்கிறது. புதுவைக்கு 266 மெகாவாட், காரைக்காலுக்கு 80 மெகாவாட், மாஹேவுக்கு 7 மெகாவாட், ஏனாமுக்கு 10 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. தேவையை விட கூடுதலாகவே மின்சாரம் கிடைத்து வருகிறது.வீடுகளுக்கும், தொழிற்சாலைகளு்கும் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் கிடைக்கச் செய்வதே எங்கள் நோக்கம்.பராமரிப்பு இல்லாதது, போதிய மின்மாற்றிகள் இல்லாததுதான் மின் கசிவுக்கு காரணம். இதை 2 மாதத்தில் சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன்.அரசு ஊழியர்கள் கடமை உணர்வோடு செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அது முறையாக பயன்படுத்தப்படவில்லை. பல சீர்திருத்தம் செய்ய உள்ளோம். குறிப்பாக அரசுப் பணியாளர்கள் நேரத்தோடு பணிக்கு வர வேண்டும். பணிக்கு நேரத்தோடு வருவதை கண்காணிக்க உத்தரவிட்டுள்ளேன்.
அனைத்து அரசு துறைகளிலும் அரசு ஊழியர்கள் சரியான நேரத்தில் வருவதை உறுதி செய்ய அனைத்து துறைகளிலும் பயோ மெட்ரிக் முறை நடைமுறைப்படுத்தப்படும். அதை கார்டு மூலம் தரலாமா அல்லது, ஊழியர்கள் கைரேகை மூலம் பதியலாமா என்பது ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்'' என்று தெரிவித்தார்.ஆய்வின் போது மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன், செயலாளர் சுந்தரவடிவேலு, தலைமைப் பொறியாளர் மதிவாணன் உடனிருந்தனர்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை