Ad Code

Responsive Advertisement

இன்ஜி., கல்லூரிகளில் இன்று முதல் 'அட்மிஷன்'

அண்ணா பல்கலை கல்லுாரிகளில், இன்று முதல் இன்ஜி., மாணவர் சேர்க்கை துவங்குகிறது.அண்ணா பல்கலையின் இணைப்புக்கு உட்பட்ட, 524 கல்லுாரிகளில், தமிழக அரசின் ஒற்றைச் சாளர முறையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 

ஜூன், 27 முதல் பொது கவுன்சிலிங் நடந்து வருகிறது. கவுன்சிலிங்கில் இடம் வழங்கப்பட்டவர்களுக்கு, அண்ணா பல்கலையின் இன்ஜி., கல்லுாரிகள், அரசு இன்ஜி., கல்லுாரிகளில், இன்று முதல் மாணவர் சேர்க்கை துவங்குகிறது.

வரும், 21 வரை மாணவர் சேர்க்கை நடக்கும். தமிழ்வழி பாடப்பிரிவு மாணவர்களுக்கு, ஆக., 1 வரை மாணவர் சேர்க்கை நடக்கும். இதையடுத்து, ஆக., 1 முதல் கல்லுாரிகளை திறக்க அண்ணா பல்கலை திட்டமிட்டு உள்ளது.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement