ஆசிரிய நண்பர்களே, யாரேனும் அரசாணை (அ) அரசு கடித்தத்தின் நகலை கொடுத்து
உதவுங்கள்!!!!!
தருமபுரி மாவட்டம்,அரூர் ஒன்றியத்தின் பழங்குடியினர் (எ) மலைவாழ் மக்கள்
வாழும் (TRIBAL SUB-PLAN AREA) பகுதியிலுள்ள தொடக்க/ நடுநிலைப்
பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 01.04.2014 முதல்
(நிறுத்தப்பட்ட) வழங்கப்படாமல் உள்ள ஈட்டுப் படியான (COMPENSATORY
ALLOWANCE) ரூ.90/-ஐ பற்றி தெரிந்தால் தெளிவான தகவல் கொடுத்து
உதவுங்கள்!!!! . அதன் விவரம் பின்வருமாறு
நாள்:13.04.1998 இன்படி மலைப்பகுதிகளில் பணிபுரியும் அரசு ஊழியர்கள்
மற்றும் ஆசிரியர்களுக்கு 01.04.1998 முதல் மலைப்படியாக ரூ.300/-யும்
குளிர்காலப் படியாக ரூ.50/- (அ) ரூ.100/- ஆகவும் வழங்கப்பட்டு
வந்தது.மேலும் மேற்சொன்ன அரசாணையின் படி, மத்திய அரசின் பரிந்துரை
பேரிலும், TRIBAL SUB-PLAN AREA பகுதிக்கு ஈட்டுப் படியாக
(COMPENSATORY ALLOWANCE) ரூ.30/-யும் வழங்கப்பட்டு வந்ததாக
சொல்லப்படுகிறது. 21.04.1998 அன்று நமது மாநில அரசு அமைத்த ஒரு
நபர் குழு (ONE MAN COMMISSION 1998) பரிந்துரையின் பேரில்
வெளியிட்ட G.O.MS.NO:499 (நிதித்துறை) நாள்: 15.09.1998 இன்படி உயர்த்தி
01.09.1998 முதல் மலைப்படியாக ரூ.450/-யும் குளிர்காலப் படியாக ரூ.100/-
(அ) ரூ.150/- ஆகவும் பிற ஈட்டுப் படியாக (OTHER COMPENSATORY ALLOWANCE)
ரூ.45/- யும் வழங்கப்பட்டு வந்தது.
தமிழக அரசின் 6-வது ஊதியக் குழுவின் G.O.MS.NO:234 (நிதித்துறை)
நாள்:01.06.2009 மற்றும் G.O.MS.NO:236 (நிதித்துறை) நாள்:01.06.2009
இன்படி 27 வகையான படிகளை (ALLOWANCE) தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த
அரசாணையின் மூலம் 01.06.2009 முதல் மலைப்படியாக ரூ.900/-யும்
குளிர்காலப் படியாக ரூ.250/- (அ) ரூ.350/- ஆகவும் பிற ஈட்டுப் படியாக
(OTHER COMPENSATORY ALLOWANCE) ரூ.90/-யும் வழங்கப்பட்டு வந்தது.
13.12.2013 அன்று சென்னை கோட்டையில் நடைபெற்ற மாண்புமிகு முதல்வர்
மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில், மலைப்படியையும் குளிர்காலப்
படியையும் உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக பிப்ரவரி 2014 இல் G.O.MS.NO:47 (நிதித்துறை)
நாள்:20.02.2014 இன்படி மலைப்படி குளிர்காலப் படிகளை உயர்த்தி அரசு
ஆணையிட்டது. இந்த அரசாணையின் மூலம் 20.02.2014 முதல் மலைப்படியாக
ரூ.1500/- யும் குளிர்காலப் படியாக ரூ.400/- (அ) ரூ.500/- ஆகவும்
வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த அரசாணையில் பிற ஈட்டுப் படியை (OTHER
COMPENSATORY ALLOWANCE) உயர்த்தவில்லை. அதனால் மார்ச் 2014 வரை ரூ.90/-
ஆகவே, வழங்கப்பட்டது. இந்த அரசாணையை காரணம் காட்டி தான் இப்படியை வழங்க
அலுவலர்கள் மறுக்கிறார்கள்.மேலும் இந்த அரசாணையில் பிற ஈட்டுப் படியை
(OTHER COMPENSATORY ALLOWANCE) நீக்கம் (இரத்து) செய்ய சொல்லி எந்த
வரிகளும் இடம் பெறவில்லை. ஆனால் திடீரென ஏப்ரல் 2014 முதல் பிற ஈட்டுப்
படியை (OTHER COMPENSATORY ALLOWANCE) இன்று வரை வழங்காமல்
நிறுத்தப்பட்டுள்ளது.
15 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த பிற ஈட்டுப் படியை (OTHER COMPENSATORY
ALLOWANCE) எந்த அரசாணையும் இல்லாமல் 01.04.2014 முதல் இன்று வரை (25
மாதங்களாக) வழங்க மறுக்கப்படுகிறது.
தமிழகத்திலுள்ள மலைப்பகுதியில் பணிபுரியும் அனைத்து மாவட்ட
ஆசிரியர்களுக்குமே வழங்கப்படவில்லையே, நமக்கு மட்டும் எப்படி
வழங்குவார்கள் என நினைத்தது தான் எங்களுடைய தவறு,ஏனெனில் தருமபுரி
மாவட்டம் அரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மலைப்பகுதியிலுள்ள உயர்நிலை/
மேல்நிலை மற்றும் GTR நலத்துறை பள்ளிகளில் பணிபுரியும்
ஆசிரியர்களுக்கும், மருத்துவமனை,மின்சாரம், காவல் துறை மற்றும்
வருவாய்துறை போன்ற அலுவலகங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கும்
தொடர்ந்து (மார்ச் 2014 க்கு பிறகும்) பிற ஈட்டுப் படியாக (OTHER
COMPENSATORY ALLOWANCE) ரூ.140/- இன்று வரையும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட
மலைப்பகுதியிலுள்ள நலத்துறை பள்ளிகள், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை
ஒன்றியம், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் ஏலகிரி மலை பள்ளிகள்,
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை ஒன்றியம் போன்ற
ஒன்றியங்களுக்குட்பட்ட தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை
உ.ஆ/த.ஆ ஆசிரியர்களுக்கு தொடர்ந்து (மார்ச் 2014 க்கு பிறகும்) பிற
ஈட்டுப்படியாக (OTHER COMPENSATORY ALLOWANCE) ரூ.90/-ஆகவும், பட்டதாரி
உ.ஆ/த.ஆ ஆசிரியர்களுக்கு தொடர்ந்து (மார்ச் 2014 க்கு பிறகும்) பிற
ஈட்டுப் படியாக (OTHER COMPENSATORY ALLOWANCE) ரூ.140/- ஆகவும் இன்று
வரை வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தின் பல ஒன்றியங்களில்
மலைப்பகுதியில் பணிபுரிவோருக்கு இப்படி தொடர்ந்துவழங்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு (அந்த ஆசிரியர்களுக்கு) தொடர்ந்து வழங்க வழி வகை
செய்யப்பட்டுள்ள அரசாணை, அரூர் ஒன்றியத்திற்கு மட்டும் தொடர்ந்து வழங்க
கூடாது என சொல்லியிருக்கா? என தெரியவில்லை.
நிறுத்தப்பட்ட இந்த படியை திரும்ப வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசின்
நிதித் துறைக்கும், AEEO அலுவலகம், அரூர் துணை சார்நிலை கருவூலத்திற்கும்
இப்படி தொடர்பாக RTI கடிதம் மூலம் தகவல் கேட்டதற்கும்,சரியான தகவலை வழங்க
வில்லை.நாங்களும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பாக
DHARMAPURI DEEO வரை சென்று மனு கொடுத்துவிட்டோம். இது பற்றி சரியான
தகவல் யாருக்குமே தெரியவில்லை.என்னுடைய சந்தேகமெல்லாம் ஒரு படியை நிறுத்த
வேண்டுமென்றால் தமிழகம் முழுவதுமே நிறுத்த வேண்டும்.பல இடங்களில் வழங்கி
கொண்டு இருக்கும் போது அரூரில் மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. இப்படியை
திரும்ப பெற உங்களுக்கு தகவல் தெரிந்தால் தெரிவிக்கவும். இந்த விசயத்தில்
தகவல் தெரிந்தால் எங்களுக்கு உதவுங்கள் அய்யா.
குறிப்பு:
இது 1992 லிருந்து வழங்கப்படுவதாகவும் இதன் பெயரும் வேறு என்றும், 1992
இல் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்த, தற்போது ஓய்வில் உள்ள ஆசிரியர் ஒருவர்
கூறியுள்ளார்.
இப்பிரச்சினையால் அரூர் ஒன்றிய 31 மலைப் பள்ளிகளில் பணிபுரியும் 107
ஆசிரியர்கள் தங்களின் OTHER COMPENSATORY ALLOWANCE உரிமையை கடந்த 2
வருடமாக இழந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
இவண்
அ.ஜெயப்பிரகாஷ், M.Sc.,M.A.,B.Ed.,D.T.Ed. இ.நி.உ.ஆ,
ஒன்றிய துணைத் தலைவர்,
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
அரூர் ஒன்றியம், தருமபுரி மாவட்டம்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை