Ad Code

Responsive Advertisement

விரைவில் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு

ஆசிரியர் இடமாறுதல் பொது கலந்தாய்வு குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு மாநில அளவில், ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து மே மாதம் நடத்தப்படும். 

ஆனால், நிகழ் கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கி, இதுவரை கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த கலந்தாய்வுக்கான புதிய விதிகளை, பள்ளிக் கல்வித் துறை உருவாக்கியுள்ளது. கடந்த சில நாள்களாகக் கலந்தாய்வு குறித்த பல்வேறு கருத்துகள் வெளியாகி வருகின்றன. இதில் பணி மாறுதல் பெறும் ஆசிரியர்கள் 6 ஆண்டுகள் அதே பள்ளியில் பணியாற்ற வேண்டும் என்ற விதிமுறையும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இது ஆசிரியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "இந்த விதிமுறைகள் குறித்த அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகலாம். இடமாறுதல் கலந்தாய்வை நிகழ் ஆண்டில் எந்தத் தவறும் இல்லாமல் சிறப்பாக நடத்தவும் திட்டமிட்டு வருகிறோம். கலந்தாய்வு தேதி அறிவிப்பு விரைவில் வெளியாகும்' என கூறினர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement