Ad Code

Responsive Advertisement

குழந்தைகளின் வளர்ச்சியை பாதிக்கும் சமூக வலைதளம்

குழந்தைகளின் நடத்தை மற்றும் ஒழுக்கம் ஆகியவற்றில், சமூக வலைதளம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.


இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் இணையதள பயன்பாடு என்பது நகரங்களில் இருந்து குக்கிராமங்கள் வரை பரவியுள்ளது. இதிலும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரிக்கிறது. பேஸ்புக்'கில் அக்கவுன்ட் இல்லையெனில் அவர்களை ஏளனமாக பார்க்கும் நிலை கூட இருக்கிறது.


எதிர்ப்பு
பிரிட்டனில் எட்பாஸ்டன் நகரில் உள்ள பிர்மிங்ஹாம் பல்கலைக்கழகம், பெற்றோர்களிடம் நடத்திய ஆய்வில் 15 சதவீத பெற்றோர்கள் மட்டுமே, சமூக வலைதளங்கள் குழந்தைகளின் சிந்தனை மற்றும் வளர்ச்சிக்கு உதவியாக உள்ளது என தெரிவித்தனர்.


40 சதவீத பெற்றோர்கள் இது முக்கியமான பிரச்னை, சமூக வலைதளங்களால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது என தெரிவித்தனர். 24 சதவீத பெற்றோர்கள், குழந்தைகளிடம் நாம் தான் அதை எவ்வாறு பயனுள்ள வகையில் பயன்படுத்த வேண்டும் என புரிய வைக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.


93 சதவீதம்
மேலும் 11 முதல் 17 வயது குழந்தைகள் சமூக வலைதளங்கள் பயன்படுத்துகின்றனரா என 1,700 பெற்றோர்களிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு 93 சதவீத பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் தினமும் சமூக வலைதளங்களை பயன்படுத்துகின்றனர் என பதிலளித்தனர்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement