Ad Code

Responsive Advertisement

பள்ளிக் கல்வித் துறையில் "சட்ட அலுவலர்' பணியிடம் உருவாக்க வலியுறுத்தல்

ஒவ்வொரு மாவட்ட அலுவலகத்துக்கும் "சட்ட அலுவலர்' என்ற புதிய பணியிடம் தோற்றுவிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


தருமபுரியில் அண்மையில் நடைபெற்ற சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் வட்டப் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அடிப்படை பணியில் 18 ஆண்டுகளாக தேர்வுநிலை, சிறப்பு நிலை மற்றும் தேக்கநிலை ஆணை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வுகளை வழங்க வேண்டும். ஆய்வக உதவியாளர் பதவி உயர்விலிருந்து இளநிலை உதவியாளர் பதவிக்கு பதவி உயர்வின் போது 3 சதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (நிர்வாகம்) பணியிடம் அமைச்சுப் பணியாளர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மாவட்ட தலைவர் செ.சின்னசாமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சா.செந்தமிழ்ச்செல்வன், பொருளர் கு.ராகவேந்திரன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் சி.செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். செயற்குழு உறுப்பினர் பெ.முனுசாமி நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement