அரசு பள்ளிகளில், ஆங்கிலவழிக் கல்விக்கு என, வசூல் செய்யப்பட்ட கட்டணத்தை, மாணவர்களுக்கே திருப்பி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில்,ஆங்கிலவழிக்கல்வி பிரிவும் நடத்தப்பட்டு வருகிறது.
ஆனால், நடப்பு கல்வியாண்டில், ஆங்கில வழிக்கல்வி படிக்கும் ஆறு முதல், பத்தாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரிடம், தலா, 200 ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், ஆங்கிலவழிக்கல்விக்கென வசூல் செய்யப்பட்ட கட்டணத்தை, மாணவர்களுக்கே திருப்பி வழங்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது: அரசுப் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரையிலான ஆங்கில வழிக்கல்விக்கான கட்டணத்தையும், அரசே திரும்ப செலுத்துவதால், அவர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டியதில்லை. ஆனால், தணிக்கையின் போது ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால், நடப்பு கல்வியாண்டில் ஆங்கில வழிக்கல்விக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இதற்கான அரசாணை மற்றும் தெளிவுரை கிடைத்த நிலையில், மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட ஆங்கில வழிக்கல்விக்கான கட்டணத்தை, திரும்ப மாணவர்களிடமே வழங்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை