மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவது சம்பந்தமாக 2009–ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை செயல்படுத்தக்கோரி தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பரிசீலிக்க, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட்டில் மனு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி இயக்குனர் கிரேடு–1 ஆக பணியாற்றி வருபவர் செந்தில். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
டிப்ளமோ படித்தவர்களுக்கு பதவி உயர்வு தற்போது மாவட்டம் தோறும் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களே மாவட்ட உடற்கல்வி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று பணியில் உள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் பணியாற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இயக்குனர்களை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர்கள் தான் கண்காணிக்கின்றனர். அப்படி இருக்கும்போது மாவட்ட உடற்கல்வி ஆய்வாளராக பணியில் நியமிக்கப்படுபவர்கள், உடற்கல்வியில் பட்ட மேற்படிப்பு படித்தவர்களாக இருக்க வேண்டும்.அவ்வாறு இல்லாமல் டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளராக நியமிக்கப்படுவதால் குறைந்த கல்வி தகுதியை உடையவர்கள் அதிக கல்வி தகுதியை உடையவர்களை கண்காணிப்பது போன்றதாகி விடுகிறது.நடவடிக்கை எடுக்கவில்லை
இதுகுறித்து அரசுக்கு பலமுறை மனு கொடுத்தோம். இந்த குறைபாட்டை சரிசெய்யும் வகையில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்கள் காலியாகும்போது உடற்கல்வி இயக்குனர் கிரேடு–1 ஆக பணியாற்றுபவர்களை பணிமூப்பு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்று 2009–ம் ஆண்டு அரசாரணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை செயல்படுத்த அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த அரசாணையை செயல்படுத்தி உடற்கல்வி இயக்குனர் கிரேடு–1 பணியில் இருப்பவர்களை கொண்டு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 1.3.2016 அன்று பள்ளிக்கல்வித்துறை செயலாளர், இயக்குனர் ஆகியோருக்கு மனு கொடுத்தேன்.
ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இந்த மனுவை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
பரிசீலிக்க உத்தரவு இந்த மனு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் எம்.ஓ.தேவன்குமார் ஆஜராகி வாதாடினார்.மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரரின் கொடுத்த மனுவை தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பரிசீலித்து 8 வாரத்துக்குள் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
0 Comments
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவையின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை" இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ "அனைத்திந்திய ஆசிரியர் பேரவை குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன்
அனைத்திந்திய ஆசிரியர் பேரவை